Friday 17 April 2015

விஜய் மல்லையாவின் விமானம் கடனுக்காக ஏலத்தில் விற்பனை

Advertisement
மும்பை:நொடிந்து போன, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பாக்கியை வசூலிக்க, அதன் நிறுவனர், விஜய் மல்லையாவின் தனி விமானம் ஏலம் விடப்பட்டது. மும்பை சர்வதேச விமான நிலையம் மேற்கொண்ட இந்த ஏலத்தில், குர்லாவை சேர்ந்த, சைலன்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்கேற்று, 22 லட்சம் ரூபாய்க்கு விமானத்தை வாங்கியது. பராமரிப்பின்றி பழுதடைந்த, அந்த விமானத்தின் பாகங்களை, தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணி, இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
அடுத்த இரு நாட்களில், மலை போல் குவிந்துள்ள பழைய இரும்பு சாமான் கிடங்கில், விமான உதிரிபாகங்கள் ஐக்கியமாகும். 'இந்தியாவிலேயே மிக ஆடம்பரமான விமான சேவை' என்ற விளம்பரத்துடன் துவக்கப்பட்ட, கிங் பிஷர் ஏர்லைன்ஸ், நிதி நெருக்கடியால், ஊழியர்களுக்கு ஊதியம் கூட தர முடியாத நிலையை சந்தித்தது.

இதையடுத்து, 2012ம் ஆண்டு அக்டோபரில், இதன் விமான சேவை நிறுத்தப்பட்டு, டிசம்பரில், பறக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ரூபாய் 7,000 கோடிக்கு மேல், நிலுவையில் உள்ள கடனுக்காக, விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகளை வங்கிகள் முடக்கி உள்ளன. கடனுக்காக, மும்பையின் வில்லே பார்லேயில் உள்ள, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கிங் பிஷர் மாளிகையும், விஜய் மல்லையாவின் கைவிட்டு போகும் என, தெரிகிறது.

No comments: