பதிவு செய்த நாள் - ஏப்ரல் 17, 2015, 11:15:11 AM
மாற்றம் செய்த நாள் - ஏப்ரல் 17, 2015, 11:20:44 AM
வெளிநாடுகளில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி முந்தைய காங்கிரஸ் அரசை தரக்குறைவாக பேசி வருவதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து பயிற்சி பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
கனடா நாட்டு இந்தியர்களிடையே நேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஊழல் மலிந்திருந்த இந்தியா தற்போது திறன் மிகு நாடாக மாறியுள்ளது என்றார். மோடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, தேர்தலில் பரப்புரை செய்யும் மனநிலையிலேயே மோடி இன்னும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தனக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களையும், தற்போதைய எதிர்க்கட்சியையும் களங்கபடுத்தும் வகையில் மோடி பேசி வருவது, இந்திய வரலாற்றிலேயே எந்த பிரதமரும் செய்யாத செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோடியின் பேச்சு தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங், ஒரு நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லும் போது ஒட்டு மொத்த நாட்டின் பிரதிநிதியாகவே செல்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் வெளிநாடுகளில் மோடி செயல்படும் விதம், அதற்கு மாறாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment