Friday 17 April 2015

லஞ்சப் புகாரில் சிக்கினால் கூடுதல் பொறுப்புகள் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

லஞ்சப் புகாரில் சிக்கினால் கூடுதல் பொறுப்புகள் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு
 
பதிவு செய்த நாள் - ஏப்ரல் 17, 2015, 11:27:07 AM
மாற்றம் செய்த நாள் - ஏப்ரல் 17, 2015, 11:59:25 AM
லஞ்சப் புகாரில் சிக்கினால் கூடுதல் பொறுப்பு கிடையாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் பணித் திறன் குறித்த ஆண்டறிக்கையில் சரிவர பணியாற்றாத ஊழியர்களாக குறிப்பிடப்படுவோர், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானோர் ஆகியோருக்கும் கூடுதல் அரசு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என அரசு கூறியுள்ளது.

அவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கூடுதல் பொறுப்பு வகித்த ஊழியர்களுக்கு, அந்தப் பொறுப்பு வகித்ததற்கான ஊதியம் அளிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments: