Thursday 16 April 2015

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்க 15 நாள் அவகாசம் வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கர்நாடக நீதிபதி கடிதம்

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்க 15 நாள் அவகாசம் வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கர்நாடக நீதிபதி கடிதம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

   சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கர்நாடக தனி நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட 4 போ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் மார்ச் 11ம் தேதி வரை 41 நாட்கள் தனி நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராவதை ரத்து செய்ய கோாி திமுக பொது செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு மனு விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதன்படி நாளையுடன், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிவடைகிறது.

க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை நேற்று வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கர்நாடக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடக தனி நீதிமன்ற நீதிபதி சி,ஆர்.குமாரசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அம்மனுக்கள் மீது இன்னும் தீர்ப்பு வெளிவராத நிலையில், என்னால் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் தீர்ப்பு வழங்க முடியவில்லை. ஆகவே, தீர்ப்பு வழங்க இன்னும் 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும்’ என கூறியுள்ளார். கர்நாடக நீதிபதி குமாரசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது கோாிக்கை ஏற்க்கப்படுமா இல்லையா என்பது நாளை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நடைபெறும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில் தெரியவரும் என்று தெரிகிறது.

No comments: